வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் வரும்போதெல்லாம், குறைந்த வட்டிக்கு சந்தோஷமாக கடன் தருபவர் சீதாராம் ஜெயின்.
உண்மையாக வருமான வரியைக் கட்டும் சிலரில் இவர் பிரமுகர்.
நல்ல மனிதர். மிக நன்றாக தமிழ் பேசுபவர்.
வருடத்தில் ஓரிரு முறை என் அலுவலகத்தின் கட்டளை படி நான் சீதாராம் ஜெயினின் அலுவலகம் செல்வது வழக்கம். நிர்வாக மேலாளர் சொல்லும் தொகையை காசோலையாக வாங்குவது அல்லது திரும்ப வட்டியோடு காசோலையாக கொடுப்பது இது தான் நான் அவரின் அலுவலகம் செல்வதின் நோக்கம்.
கொடுக்கப் பட்ட அந்த பணி எப்போதும் சில நிமிடங்களில் முடிந்து விடும்
அவருடைய கண்ணாடி கேபினில் ஹிந்து மத நம்பிக்கையின் சித்திரங்கள் / அவதாரங்களின் புகைப்படங்கள் மற்றும் ஜயின் குரு போன்றோரின் புகைப்படங்கள் இருக்கும்.
அத்தனைப் படங்களுக்கும் பல்வேறு பூக்களால் மாலை போட்டிருப்பார். நெய்விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். ஊதுவத்தி பக்தியை அதிகரிக்கும் மணத்துடன் புகைந்துக் கொண்டிருக்கும் ! இனிய ஸ்வரத்தில் காயத்ரீ ஜபம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.
அந்த அறைக்குள் அவர் செருப்பை அணிந்து கொண்டு செல்ல மாட்டார்.
காலை - மாலை பூஜை வேளை, அல்லது விருந்தினர் வந்தால் அவரோடு பேசும் நேரம் தவிற அந்த கேபினுக்குள் அவர் செல்ல மாட்டார்.
அலுவலக வேலையெல்லாம் அவரிடம் வேலை செய்ப்வர்களோடு சேர்ந்து அவர்களில் ஒருவராக கேபினுக்கு வெளியே உள்ள இடத்தில் அமர்ந்து செய்வார்.
வாங்க ஐயா! வணக்கம் என்று சொல்லி எழுந்து நின்று வரவேற்பார், என்னையும்!
" தம்பி கேபினில் ஏ.சி போடுங்க, சுரேஷ் சாருக்கு மசாளா டீ, எனக்கும் - என்று அவருடைய அலுவலகத்தில் குள்ளமாக வேலையில் இருக்கும் ராமுவிடம் சொல்ல ராமு உடனே ச்ந்தோஷமுடன் அந்தப் பணியினை செய்வார். இது வழக்காமான ஒன்று!
கடந்த முறை சென்ற போது நானும் சீதாராம் ஜெயினும் பேசிக்கொண்டது.
வணக்கம் சீதாராம்ஜீ நீங்க ப்படி இருக்கிங்க?
நல்லா இருக்கேன் சுரேஷ் சார்.
சரி... எப்படி நீங்க இப்படி அழகான தமிழ் பேசறீங்க?
சார் எங்க அப்பா ராஜஸ்தானிலிருந்து இங்கே சென்னையில் வியாபாரம் ஆரம்பிக்கும்போது என்னை அரசினர் பள்ளியில் சேர்த்தார்கள். 12 ஆம் வகுப்பு வரை எல்லாம் தமிழிலேயே படித்தேன். பிறகு பி.எ படிக்கும் போது தான் ஆங்கிலத்தில் பொருளாதாரம் படித்தேன்
அதற்குள் ராமு மசாளா டீ என் முன்னே வைத்தான். அவருக்கும் ஒரு கோப்பை!
சுரேஷ் சார் டீ சாப்பிடுங்க
மசாளா டீ , ரொம நன்றாக இருக்கிறதே சீதாராம்?
சார் இது நம்ம அலுவலகத்தின் கீழ் உள்ள நாயர் கடையிலிருந்து தான் வருகிறது. இந்த நாயரும் நானும் பத்து வ்ருட காலம் பேசாமல் இருந்தோம். க்டந்த மாதம் தான் பேச ஆரம்பித்தோம்...
மசாளா தேநீரின் ருசியை விட இவர் என்ன சொல்லப் போகிறார் என்ற சுவாரஸ்யம் என்னில்!
அப்படி என்ன நடந்தது சீதாராம்ஜீ ?
சுரேஷ் சார், இந்த நாயர் ரொம்ப வருஷமா குறைந்த வாடகைக்கு இருந்தார். வாடகை கூட கேட்கும்போது தந்திடுவர். ஒரு நாள் அங்கே ஒரு ரவுடி வந்து சண்டைப் போடுவதை பார்த்தேன்.
நாம நல்ல அலுவலகம் வைத்திருக்கோம் எதற்கு அசிங்கமாக இங்கே ஒரு டீக்கடை என்று நினைத்து, நாயரை கூப்பிட்டு, நீ அடுத்த மாதம் கடையை காலி செய்து சாவி ஒப்படைத்து விடு என்று கொஞ்சம் கோபமாக சொல்லி விட்டேன்.
அப்போது அவருக்கு 50 - 55 வயதிருக்கும். நாயரும் கோபப்பட்டு, " நான் காலி செய்ய முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று சொல்லி கோபமாக சென்று விட்டார்.
நான் வக்கீல் நோட்டீஸ் கொடுத்தேன்.
அப்படியே கேஸ் வளர்ந்து கடந்த் பத்து வருடங்கள் ஓடிக் கொண்டிரந்தது.
நான் நாயரை காலி செய்த முறை தவறு : அவரை உடனடி காலி செய்ய முடியாது என்றெல்லாம் எனக்கெதிராக கடந்த மாத்ம் நீதிமன்றத்திலிருந்து விதி வந்தது.
அந்த விதி வந்த அதே நாள் மாலை நாயர் என்னைப் பார்க்க வந்தார். "சேட்ஜி, இந்தாங்க உங்க கடை சாவி, எனக்கு உங்களை தோற்கடிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல; நான் ஜயிக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருந்தது" என்றார்.
என்னை விட பத்து பதினைந்து வயது மூத்த்வர் அவரின் காலில் விழிந்து வணங்கினேன்.
அடச்சே! இந்த மனுஷனை பத்து வருடமாக நீதிமன்றத்திற்கு ஓடவைத்தேனே என்று என் மன்ம் கலங்கினது.
இதைக் கண்டதும் எங்கள் கணக்கீட்டாளர் ( அக்கவுண்டண்ட்) ஓடி வந்து, சார் கடந்த பத்து வருடங்களும் இவரின் கடையிலிருந்து தான் நாம் ஒரு நாள் மூன்று நான்கு முறை டீ வாங்குகிறோம்.
ஆனால் உங்களுக்கு தரும் மசாளா டீக்கு மட்டும் இவர் இது வரை பில் போட்டதே இல்லை. இதை இத்தனைக் காலம் சொல்ல எனக்கு தைரியம் இல்லை, மன்னிக்கவும் என்றார்.
சுரேஷ் சார் இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியில் சிலை போல ஒரு நொடி நின்று விட்டேன்!
பிறகு?
பிறகென்ன, சுரேஷ் சார் ! அவரிடமே நிர்பந்தமாக அந்த கடையின் சாவியைக் கொடுத்து விட்டேன். அவர் மறுத்தார். நான் கெஞ்சி கேட்டபோது சம்மதித்தார்.
75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரின் டீக்கடையை நான் அழகு படுத்திக் கொடுத்தேன்.
"நாயர் நீங்கள் வாழும் காலம் வரை இந்த கடையில் வியாபாரம் செய்யுங்கள், எனக்கு வாடகை வேண்டாம், மினாசார கட்டணம் கூட நானே கட்டிக்கொள்கிறேன். உங்களுடைய இலவச மாசாளா டீ மட்டும் தினமும் எனக்கு தாருங்கள்" - என்றேன்.
அவருடைய வக்கீல் மூலமாக அவருக்கான அத்தனை நீதிமன்ற செலவுகளையும் கேட்டறிந்து, அவருடைய வீட்டிற்கு சென்று காசோலை கொடுத்து வந்தேன்.
என் வாழ்க்கையில் இறைவன் தந்த ஒரு பெரிய நட்பாக இந்த நாயரை காண்கிறேன்.
சீதாராம்ஜீ... எனக்கு இந்த நாயரை பார்க்க வேண்டுமே!
அதற்கென்ன சார்? இப்போதே வரச்சொல்கிறேன் என்று மொபைலில்.." நாயர் நான் தான், கொஞ்சம் மேல நம்ம ஆப்பிஸுக்கு வரீங்களா...ம்ம்ம் சரி சரி.." என்றார்.
சில நிமிடங்களில் என் முன்னே நாயர்!
வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி, தோளில் ஒரு வெள்ளைத் துண்டு, 60-62 வயது கொண்ட அந்த மனிதரின் அன்பான பார்வை, பண்பான நடை இவை யாவும் கண்டு வியந்தேன்.
இவர் மிஸ்டர் சுரேஷ். நம்ம பழை நணப்ர் நாயர் என்று அறிமுகப்படுத்தினார்.
அந்த மனிதரில் இறைவனைக் கண்டேன்...
Friday, July 29, 2011
சீதாரம் ஜெயினும் நாயரும்...
Subscribe to:
Posts (Atom)